கடந்த 2022-23ம் ஆண்டுக்கான வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை, 8.15 சதவீதமாக வழங்க மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த உத்தரவையடுத்து, இ.பி.எப்.ஓ., எனப்படும் பணியாளர் வருங்கால வைப்புநிதி ஆணையம், தனது 6 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்களின் 2022-23ம் ஆண்டுக்கான வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை 8.15 சதவீதமாக உயர்த்தி வழங்கிட தனது அனைத்து அலுவலகங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.
நடப்பாண்டு மார்ச் மாதத் தொடக்கத்தில் இந்த வட்டி விகிதத்திற்கு நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதைத் தொடர்ந்து, சந்தாதாரர்களின் கணக்குகளில் உயத்திய வட்டி விகிதத்தை வரவு வைக்கும் செயல்முறைகளை, இ.பி.எப்.ஓ., அலுவலகங்கள் துவக்க உள்ளன.
கடந்த மார்ச் 2022ல், 2021-22ம் ஆண்டு வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை, முந்தைய ஆண்டான 2020-21ல் வழங்கப்பட்ட 8.50 சதவீதத்தில் இருந்து 8.10 சதவீதமாக குறைத்து வழங்கியது குறிப்பிடத்தக்கது.
0 Comments