புனரமைக்கப்பட்ட ஹாக்கி ஸ்டேடியத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் / Chief Minister M. K. Stalin inaugurated the reconstructed hockey stadium
16 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் மீண்டும் நடைபெறுகின்ற இப்போட்டியை ஹாக்கி இந்தியாவுடன் இணைந்து தமிழ்நாடு அரசு நடத்த உள்ளது.
இப்போட்டியில் ஆசியாவை சேர்ந்த இந்தியா சீனா பாகிஸ்தான், மலேசிய ஜப்பான், மற்றும் தென் கொரிய ஆகிய 45 நாடுகளின் அணிகள் பங்கேற்கின்றன.
மேலும், சர்வதேச அளவிலான இப்போட்டியினை சிறப்பாக நடத்தும் வகையில், 16 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கத்தில் 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் தரத்திலான முதன்மை ஹாக்கி செயற்கை இழை ஆடுகளம். வீரர்கள் பயற்சி செய்வதற்கான செயற்கை இழை ஆடுகளம் மற்றும் இணைப்பு பணிகள் உள்ளிட்ட பல மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த புதிய மேம்படுத்தப்பட்ட ஹாக்கி மைதானத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பி.கே.சேகர் பாபு, சென்னை மேயர் பிரியா ராஜன் மற்றும் உதயநிதியின் மகன் இன்பநிதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக, ஆடவர் ஹாக்கி கோப்பை - 2023" போட்டியின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள சிலையை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.
0 Comments