'கோப் பஜார்' எனும் மொபைல் போன் செயலியில், மளிகை உட்பட, 64 பொருட்களை, 'ஆர்டர்' கொடுத்தால், வீடுகளுக்கு உடனே, 'டெலிவரி' செய்யப்படும்.
கூட்டுறவு சங்கங்களின் தயாரிப்புகளை சந்தைப்படுத்தவும், வீடுகளுக்கு டெலிவரி செய்யவும், 'கோப் பஜார்' எனப்படும் கூட்டுறவு சந்தை செயலி உருவாக்கப்பட்டு உள்ளது.
அதை மக்களின் பயன்பாட்டிற்கு, சென்னை தலைமை செயலகத்தில் கூட்டுறவு துறை அமைச்சர் பெரிய கருப்பன் துவக்கி வைத்தார்.
இந்த செயலி வாயிலாக, திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம், ஈரோடு, பெருந்துறை, சைதாப்பேட்டை கூட்டுறவு சங்கங்கள், திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம், காஞ்சிபுரம் பண்டகசாலை, கொல்லிமலை மற்றும் சத்தியமங்கலம் பெரும் பன்னோக்கு கூட்டுறவு சங்கம் ஆகியவற்றின் மளிகை, தேன், மஞ்சள் துாள், மிளகாய் துாள் உட்பட, 44 பொருட்களை வாங்கலாம்.
இது தவிர, கூட்டுறவு விற்பனை இணையத்தின் உரங்கள், நுண்ணுாட்ட சத்து, நீரில் கரையும் உரங்கள் உட்பட, 20 பொருட்கள் என மொத்தம், 64 பொருட்களுக்கும் 'ஆர்டர்' கொடுக்கலாம்.
ENGLISH
If you place an 'order' for 64 items, including groceries, on the 'Co-Op Bazaar' mobile phone application, they will be 'delivered' to your home immediately. A co-operative market app called 'Co-Op Bazaar' has been developed to market the products of the co-operative societies and deliver them to homes.
It was inaugurated by Cooperative Minister Periya Karuppan at Chennai Chief Secretariat for the use of people. Through this app, you can buy 44 items including grocery, honey, turmeric powder, chilli powder from Tiruchengode Agricultural Producers Cooperative Society, Erode, Perundurai, Saidappettai Cooperative Societies, Tiruvallikeni City Cooperative Society, Kanchipuram Shop, Kollimalai and Sathyamangalam Perum Pannoku Cooperative Society.
Apart from this, Co-operatives can 'order' a total of 64 products, including 20 products including fertilizers, micronutrients, water-soluble fertilizers on the internet.
0 Comments