ஐரோப்பிய நாடுகளில் தற்போதுள்ள மிகப் பெரும் பிரச்னை, புலம்பெயர்ந்து வரும் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பது தான். போர் மற்றும் பிற காரணங்களால் பல நாடுகளில் இருந்து, ஐரோப்பிய நாடுகளுக்கு பலர் புலம் பெயர்ந்து வருகின்றனர்.
சட்டவிரோதமாக வெளிநாடுகளில் இருந்து புலம்பெயர்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் முயற்சியில் ஐரோப்பிய நாடான நெதர்லாந்து முயற்சித்து வருகிறது.
நான்கு கட்சிகள் அடங்கிய ஆளும் கூட்டணியில், பிரதமர் மார்க் ருட்டேவின் இந்த முயற்சிக்கு மற்ற கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
கடந்த, 2010ல் பதவியேற்ற ருட்டே, நெதர்லாந்தின் நீண்டகால பிரதமராக உள்ளார். கடந்த, 2020 ஜனவரியில் இந்தக் கூட்டணி அரசு பதவியேற்றது.
அப்போதிருந்தே, புலம்பெயர்ந்தோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.கடந்த சில நாட்களாக மிகத் தீவிர ஆலோசனைகள் நடந்த நிலையில், ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.
இதையடுத்து, தன் பதவியை ராஜினாமா செய்து, அமைச்சரவையை கலைப்பதாக ருட்டே அறிவித்தார்.
0 Comments