ஒரு சிறு லாரி போன்ற வாகனத்தில் 'ஸ்பெக்ட்ரோனிக்' நிறுவனத்தின் ஹைட்ரஜன் எரிபொருள் மின்கலன் பொருத்தப்பட்டிருக்கும். இந்த லாரியில், ஒரு ட்ட வரையிலான எடையும் கொண்டு செல்லலாம்.
மேலும் 500 கிலோமீட்டர் தூரம் வரை ஓடும் திறன் பெற்றது. அது அதிவேகமாக மணிக்கு 44 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. ஐந்து நிமிடங்களில் அதில் எரிபொருள் நிரப்பப் முடியும்.
ஹைட்ரஜன் எரிபொருளின் மின்கலன், காற்றழுத்தப்பட்ட கலனுக்குள் உள்ள ஹைட்ரஜன் எரிபொருளைக் கொண்டும் காற்றில் உள்ள ஆக்ஸிடன் கொண்டும் ரசாயன முறைப்படி மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.
ஹைட்ரஜன் எரிபொருள் மின்கலன் தொடர்பில் நடத்தப்படும் இரண்டாவது மிகப் பெரிய சோதனை இதுவாகும்,மெர்சிடிஸ் பென்ஸ் A-வகை சிறிய கார்களில் எரிபொருள் மின்கல மின்சாரம் பொருத்தப்பட்டிருந்தபோது அது சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
அவை கோஸ்ட் ரோட்டில் உள்ள பிபி (BP) பெட்ரோல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள ஹைட்ரஜன் சாவடியில் எரிபொருளை நிரப்பின. அத்தொழில்நுட்பத்தில் செலவுகள் சற்று அதிகமாக இருந்ததால் அது கைவிடப்பட்டது.
இருப்பினும், இந்தத் தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்ட பல்வேறு வளர்ந்த நாடுகள், தூய்மை எரிசக்தித் திட்டமாக தங்கள் நாடுகளில் அவற்றை மேற்கொண்டுள்ளன.
ஹியுண்டே, பிஎம்டபுள்யூ, டோயோட்டா முதலிய நிறுவனங்கள் தங்கள் சிறிய வாகனங்களுக்கு எரிபொருள் மின்கல மின்சாரத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 Comments