இந்தியாவும், பனாமாவும் தேர்தல் தொடர்பான ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் / India and Panama sign Memorandum of Understanding on Electoral Cooperation
தேர்தல் மேலாண்மை மற்றும் நிர்வாகத் துறையில் ஒத்துழைப்புக்கு நிறுவன ரீதியிலான கட்டமைப்பை உருவாக்க இந்தியத் தேர்தல் ஆணையமும், பனாமாவின் தேர்தல் நடுவர் மன்றமும் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இரு நாடுகளின் தேர்தல் மேலாண்மை அமைப்புகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை வலப்படுத்துவது மற்றும் தகவல் பரிமாற்றம் குறித்து இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ராஜீவ் குமார் தலைமையிலான குழுவினர், பனாமாவின் தேர்தல் நடுவர்மன்ற தலைமை நிர்வாகி திரு ஆல்ஃபிரடோ ஜூன்கா வெண்டேக்கேயுடன் கலந்துரையாடினர்.
இந்த உரையாடலின் போது, பனாமாவின் முதலாவது துணைத்தலைமை நிர்வாகி திரு எட்வர்டோ வால்டெஸ் எஸ்கோஃபெரி, இரண்டாவது துணைத் தலைமை நிர்வாகி திரு லூயிஸ் ஏ குவேரா மோரல்ஸ் ஆகியோர் உடனிருந்தனர்.
ENGLISH
The Election Commission of India and the Electoral Tribunal of Panama today signed a Memorandum of Understanding to create an institutional framework for cooperation in the field of election management and administration.
The delegation led by the Chief Election Commissioner of India, Mr. Rajiv Kumar, held discussions with the Chief Executive of the Electoral Commission of Panama, Mr. Alfredo Junca Wendeke, on strengthening coordination and exchange of information between the election management systems of the two countries.
During this conversation, the First Deputy Chief Executive of Panama, Mr. Eduardo Valdez Escoferí, and the Second Deputy Chief Executive, Mr. Luis A. Guevara Morales were present.
0 Comments