தென்கிழக்கு ஆசியாவில் வியட்நாம் நாடு அமைந்துள்ளது. இந்த நாட்டின் வடக்குப் பகுதி சீன எல்லையை ஒட்டி இருக்கிறது. கிழக்குப் பகுதியில் தென் சீனக் கடல் இருக்கிறது. எல்லைப் பகுதி மற்றும் தென் சீனக் கடல் பகுதியில் சீனாவுக்கும் வியட்நாமுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் நீடிக்கிறது.
இதன் காரணமாக கடந்த 1979-ம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையே போர் ஏற்பட்டது. அப்போது வியட்நாமுக்கு ராணுவ ரீதியாக இந்தியா பல்வேறு உதவிகளை வழங்கியது.
வியட்நாம் கடற்படைக்கு இந்தியா சார்பில் ஐஎன்எஸ் கிர்பான் என்ற போர்க்கப்பல் பரிசாக வழங்கப்பட்டு உள்ளது. கடந்த 1991-ம் ஆண்டில் கிர்பான் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது.
1,450 டன் எடை,90 மீட்டர் நீளம், 10.45 மீட்டர் அகலம் கொண்ட இந்த போர்க்கப்பலில் 12 அதிகாரிகள், 100 மாலுமிகள் பணியாற்றினர். இதில் அதிநவீன ஏவுகணைகள், நாசகார ஆயுதங்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
வியட்நாமின் கேம் ரான் நகர கடற்படைத் தளத்தில் நடைபெற்ற விழாவில் ஐஎன்எஸ் கிர்பான் போர்க்கப்பலை இந்திய கடற்படைத் தளபதி ஹரிகுமார் வியட்நாம் கடற்படையிடம் ஒப்படைத்தார்.
0 Comments