கொரியா ஓபன் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் - சிராக் ஷெட்டி இணை சாம்பியன் பட்டம் வென்றது.
பைனலில் முதல் நிலை ஜோடியான இந்தோனேசியாவின் பஜர் அல்பியான் – முகமது ரியான் அர்டியான்டோ உடன் நேற்று மோதிய இந்திய இணை முதல் செட்டை 17-21 என்ற கணக்கில் இழந்து பின்தங்கியது.
எனினும், அடுத்த 2 செட்களிலும் அதிரடியாக விளையாடி புள்ளிகளைக் குவித்த சாத்விக் – சிராக் இணை 17-21, 21-13, 21-14 என்ற செட் கணக்கில் வென்று தங்கப் பதக்கத்தை முத்தமிட்டது.
நடப்பு சீசனில் சுவிஸ் ஓபன், ஆசிய சாம்பியன்ஷிப், இந்தோனேசியா ஓபன் தொடர்களைத் தொடர்ந்து சாத்விக் – சிராக் வென்ற 4வது சாம்பியன் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments