இந்திய அமெரிக்க உத்திபூர்வ பசுமை எரிசக்தி கூட்டு முயற்சிகள் தொடர்பான அமைச்சர்கள் அளவிலான கூட்டறிக்கை / Ministerial Joint Memorandum on India-US Strategic Green Energy Partnerships
இந்தியா அமெரிக்கா இடையே பசுமை எரிசக்தி கூட்டு முயற்சிகள் தொடர்பான அமைச்சர்கள் அளவிலான கூட்டம் தில்லியில் நடைபெற்றது.
இந்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அமெரிக்க எரிசக்தி செயலாளர் ஜெனிபர் க்ரான்ஹோம் ஆகியோர் இந்த கூட்டத்தில் பேச்சுக்கள் நடத்தினர்.
இருதரப்பு எரிசக்தி ஒத்துழைப்பு இருநாடுகளும் இடையே வளர்ந்து வரும் நிலையில் இருதரப்பு பசுமை எரிசக்தி முன்முயற்சிகள் மற்றும் எட்டியுள்ள மைல்கற்கள் ஆகியவை குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
எரிசக்தி பாதுகாப்பு, பசுமை எரிசக்தி கண்டுபிடுப்புகள், பருவநிலை மாற்றம் குறித்த கலந்துரையாடல்கள் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நிலைகள் ஆகியவை குறித்தும் இந்த கூட்டத்தில் விரிவாக பரிசீலிக்கப்பட்டது.
மலிவான, நம்பிகைக்கு உகந்த பசுமை எரிசக்தி விநியோகம் குறித்து முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இந்த பேச்சுக்கள் நடைபெற்றன.
இந்தியாவும் அமெரிக்காவும் இருபெரும் ஜனநாயக நாடுகள் என்பதோடு அளவில் பெரியதும் அதிவேகமாக வளர்ந்து வருவதுமான பொருளாதாரங்களாக திகழ்வதால் இருநாடுகளும் இணைந்து இந்த விவகாரத்தில் கூட்டாக பயணிப்பது இருதரப்பு நலனுக்காக மட்டுமின்றி உலகளாவிய எரிசக்தி மாற்றத்திற்கும் வழிவகுப்பதாக அமையும் என்று முடிவெடுக்கப்பட்டது.
பசுமையான மாசற்ற எரிசக்தியை எதிகாலத்தில் எந்தெந்த துறைகளில் பயன்படுத்த முடியும், இதற்கான திறன்களை மேம்படுத்துவது எப்படி, ஆய்வகங்கள் வாயிலான ஒத்துழைப்பு போன்ற பல்வேறு அம்சங்கள் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.
0 Comments