தனிநபர்களின் தனிப்பட்ட தரவைப் பாதுகாப்பதற்கான உரிமை மற்றும் அதனுடன் தொடர்புடைய விஷயங்களுக்காகவும் தனிநபர்களின் உரிமையை அங்கீகரிக்கும் விதத்தில் டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா 2023 உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தின் விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு ரூ.250 கோடி அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் 20ம் தேதி துவங்கி அடுத்த மாதம் 11ம் தேதி வரை நடக்கிறது. அப்போது நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்படும்.
இதில் அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் ஒட்டுமொத்த விலக்கு எதுவும் அளிக்கப்படவில்லை. இதில் ஏற்படும் சச்சரவுகளை தரவு பாதுகாப்பு வாரியம் இறுதி செய்யும். யாருக்காவது பாதிப்பு ஏற்பட்டால் சிவில் நீதிமன்றங்களை அணுகி நிவாரணம் பெற்று கொள்ளலாம்.
0 Comments