மத்தியப் பிரதேசத்தின் ஷாதோலில் அரிவாள் செல் ரத்தசோகை ஒழிப்பு தேசிய இயக்கத்தை பிரதமர் தொடங்கி வைத்தார் / The Prime Minister launched the National Sickle Cell Anemia Eradication Movement at Shahdol, Madhya Pradesh
பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஷாதோலில் அரிவாள் செல் ரத்தசோகை ஒழிப்பு தேசிய இயக்கத்தைத் தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு செல் மரபணு நிலை அட்டைகளை வழங்கினார்.
இந்த இயக்கம், அரிவாள் செல் நோயால் ஏற்படும் சுகாதார சவால்களை, குறிப்பாகப் பழங்குடியின மக்கள் எதிர்கொள்ளும் நோய் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்டதாகும்.
2047 ஆம் ஆண்டுக்குள் இந்த நோயை முற்றிலுமாக ஒழிப்பதே அரசின் முக்கிய நோக்கமாகும். 2023 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் இந்த நோய் ஒழிப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டது.
குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், மேற்கு வங்கம், ஒடிசா, தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா, அஸ்ஸாம், உத்தரப்பிரதேசம், கேரளா, பீகார், உத்தராகண்ட் ஆகிய அதிக கவனம் செலுத்தப்பட வேண்டிய 17 மாநிங்களைச் சேர்ந்த 278 மாவட்டங்களில் இந்த இயக்கம் செயல்படுத்தப்படும்.
மத்தியப் பிரதேசத்தில் சுமார் 3.57 கோடி ஆயுஷ்மான் பாரத் பிரதமர் ஜன் ஆரோக்கிய யோஜனா அட்டைகளின் விநியோகத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியின் போது, 16-ம் நூற்றாண்டின் மத்தியில் கோண்ட்வானாவை ஆட்சி செய்த ராணி துர்காவதியை பிரதமர் கௌரவித்தார்.
0 Comments