பள்ளிக்கல்வித்துறை மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் கல்வித்துறை மேம்பாட்டிற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் / School Education MoU with Microsoft for Education Development
TEALS (Tecnical Education And Learning Support) எனும் திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. தமிழ்நாட்டின் கிராம பகுதிகளைச் சேர்ந்த மாணவச் செல்வங்களுக்கு அனைத்து தொழில்நுட்பம் சார்ந்த புரிதலும் சென்றடைய TEALS திட்டம் செயல்படுத்தப்படும்.
முதலமைச்சர் ஸ்டாலின் வானவில் மன்றம் திட்டத்தின் வாயிலாக STEM முயற்சியை தொடங்கி வைத்தார்கள். மாணவர்களின் கண்டுபிடிப்பு திறனை ஊக்குவிக்கும் விதமாக 710 கருத்தாளர்களின் உதவியோடு மாணவர்களின் அறிவியல் திறன்கள் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றது.
இதன் அடுத்த கட்டமாக Robotics, Artificial Intelligence, Machine learning போன்ற தொழில்நுட்பங்கள் நமது கிராமப்புற மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும் எனும் நோக்கில் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ENGLISH
This MoU has been signed to implement TEALS (Technical Education And Learning Support) project. The TEALS program will be implemented to reach all the technology literate students from rural areas of Tamil Nadu.
Chief Minister Stalin launched the STEM initiative through the Rainbow Forum programme. The science skills of the students are being promoted with the help of 710 experts to encourage the inventiveness of the students.
As the next step, a historic MoU has been signed with Microsoft to make robotics, artificial intelligence, and machine learning technologies available to our rural students.
0 Comments