துலுக்கர்பட்டி கிராமத்தில், 36 ஏக்கரில், தொல்லியல் மேடு உள்ளது. இந்தாண்டு அங்கு, இரண்டாம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கின. இதில், 'புலி' என்ற எழுத்துகள் பொறிக்கப்பட்ட, கருப்பு - சிவப்பு நிற பானையோடு கண்டெடுக்கப்பட்டது.
இந்நிலையில், மேலும், மூன்று பானையோடுகளில் தமிழி எழுத்து பொறிப்புகள் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இது, தொடர்ச்சியற்ற உடைந்த பகுதிகளாக உள்ளன. தற்போது கிடைத்துள்ள பானை ஓடுகளில், 'திஈய, திச, குவிர(ன்)' ஆகிய தமிழி எழுத்துப் பொறிப்புகள் உள்ளன.
0 Comments