ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனரும், டெஸ்லா கார் நிறுவன தலைமை செயல் அதிகாரியும், உலக பெரும் பணக்காரர்களில் ஒருவருமாக இருப்பவர் எலன் மஸ்க்.
இவர் கடந்த ஆண்டு முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான டிவிட்டர் நிறுவனத்தை 3.61 லட்சம் கோடி ரூபாய்க்கு வாங்கினார். டிவிட்டர் நிறுவனத்தை வாங்கியது முதலே நிர்வாக சீர்திருத்தம் என்ற பெயரில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வந்தார்.
ஆயிரக்கணக்கான உயரதிகாரிகள், ஊழியர்களை பணி நீக்கம் செய்து, பின்பு சிலரை மீண்டும் பணியில் சேர்த்துக் கொண்டார். அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்குகளை குறிக்கும் ப்ளூ டிக்குக்கு சந்தா செலுத்துவதை கட்டாயமாக்கினார். டிவிட்டர் லோகோவையும் மாற்றினார்.
டிவிட்டரில் பதிவிடும் கணக்குகள், டிவிட்டர் பக்கத்தை பயன்படுத்துவோர் ஒருநாளைக்கு எத்தனை பதிவுகளை படிக்கலாம் என்பது உள்ளிட்ட பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வௌியிட்டு வந்தார்.
தற்போது டிவிட்டர் நிறுவனத்தின் பெயர் மற்றும் லோகோவை எலான் மஸ்க் 'X' என்று மாற்றினார்.
0 Comments