அடிப்படைக் கல்வியறிவு தொடர்பான உல்லாஸ் (ULLAS) மொபைல் செயலியை மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் அறிமுகப்படுத்தினார் / Union Education Minister Mr. Dharmendra Pradhan launched ULLAS Mobile App on Basic Literacy
புதிய தேசிய கல்விக் கொள்கை 2020-ன் 3 வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு புதுதில்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் அகில பாரதிய சிக்ஷா சமகம் 2023 எனப்படும் அகில இந்தியக் கல்வி மாநாடு இரண்டு நாட்கள் (29.07.2023 மற்றும் 30.07.2023) நடைபெறுகிறது.
இதில் மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் உல்லாஸ் என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தினார்.
சமூகத்தில் அனைவரும் வாழ்நாள் கற்றல் தொடர்பான அம்சங்களைப் புரிந்துகொள்வது (ULLAS Understanding Lifelong Learning for All in Society) என்ற பொருளில் இந்த உல்லாஸ் மொபைல் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த செயலி அடிப்படை எழுத்தறிவு மற்றும் முக்கியமான வாழ்க்கைத் திறன்கள் தொடர்பான இடைவெளிகளைக் குறைக்கும். பள்ளிக்குச் செல்லும் வாய்ப்பை இழந்த 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு அடிப்படைக் கல்வி, டிஜிட்டல், நிதி கல்வியறிவு வாழ்க்கைத் திறன்களை வழங்குகிறது இது. இத்திட்டம் தன்னார்வலர்கள் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
0 Comments