புதுடில்லிக்கு மாநில அந்தஸ்து இல்லாததால், அதன் நிர்வாக அதிகாரம் முழுதும் துணைநிலை கவர்னர் வசம் உள்ளதால் புதுடில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசுக்கும், துணைநிலை கவர்னருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.
இதை தொடர்ந்து, தேசிய தலைநகர் குடிமைப்பணி ஆணையத்தை உருவாக்கும் அவசர சட்டத்தை, ஜனாதிபதி திரவுபதி முர்மு சமீபத்தில் பிறப்பித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ஆம் ஆத்மி, எதிர்க்கட்சிகளிடம் ஆதரவு கோரி வருகிறது.
இந்நிலையில் இன்று (25ம் தேதி) நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த அவசர சட்ட மசோதாவால் புதுடில்லியில் உள்ள அரசு அதிகாரி களின் பணி நியமனம், இட மாற்றம் உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்தும் அதிகாரம் மத்திய அரசு வசம் இருக்கும்.
0 Comments