என்.டி.ராமாராவ் நூற்றாண்டு விழாவையொட்டி ரூ.100 நாணயத்தை ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டார் / President Drabupati Murmu releases Rs 100 coin on the occasion of NT Rama Rao centenary
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில், 1923 மே 28ல் பிறந்தவர், என்.டி.ராமாராவ்.தெலுங்கில், 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர், 1982ல் தெலுங்கு தேசம் கட்சியை துவக்கி ஒருங்கிணைந்த ஆந்திராவின் முதல்வராக மூன்று முறை பதவி வகித்துள்ளார்.
இந்நிலையில், ராமாராவின் நுாற்றாண்டு விழாவையொட்டி, தலைநகர் புதுடில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில், விழா நடந்தது. இதில், அவருடைய நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் தலைவருமான சந்திரபாபு நாயுடு ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது, ராமாராவின் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டார். நாணயத்தின் ஒருபுறம் அசோக சக்கரம், மறுபுறம் என்.டி.ராமாராவ் உருவத்துடன், 'நந்தமுரி தாரக ராமா ராவ் சதா ஜெயந்தி' என்ற வாசகம் உள்ளது.
0 Comments