காஞ்சியில் ரூ.1,600 கோடியில் செல்போன் உதிரிபாக தயாரிப்பு மையம் - முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் / Rs 1,600 crore cell phone component manufacturing hub in Kanchi - deal signed in presence of Chief Minister Stalin
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை, பாக்ஸ்கான் நிறுவனத் தலைவர் யங் லியூ சந்தித்து, தமிழகத்தில் பாக்ஸ்கான் நிறுவனம் மேற்கொண்டு வரும் புதிய முதலீடுகள் தொடர்பாக விவாதித்தார்.
அப்போது, காஞ்சிபுரத்தில் செல்போன் உதிரிபாக தயாரிப்பு மையத்தை நிறுவுவதற்காக ரூ.1,600 கோடி முதலீடு செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும், இந்த முதலீட்டுக்காக தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனம் மற்றும்பாக்ஸ்கான் நிறுவனம் ஆகியவற்றுக்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
0 Comments