சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) நடைமுறைக்கு வந்த பிறகு ஐந்தாவது முறையாக மாதாந்திர ஜிஎஸ்டி வசூல் ரூ.1.60 லட்சம் கோடியை தாண்டி உள்ளது.
கடந்த ஜூலை மாதம் மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,65,105 கோடி. 2022 ஜூலை மாத ஜிஎஸ்டி வருவாயை விட இந்த ஆண்டு ஜூலை மாத ஜிஎஸ்டி வருவாய் 11 சதவீதம் அதிகமாக உள்ளது. 2022 ஜூலை மாதம் ரூ.1.49 லட்சம் கோடியாக இருந்தது.
இந்த ஜூலை மாதம் வசூலான ரூ.1.65 லட்சம் கோடியில் ஒன்றிய ஜிஎஸ்டி ரூ.29,773 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ.37,623 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.85,930 கோடியும் வசூலாகி உள்ளது.
ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியில் பொருட்கள் இறக்குமதியில் வசூலான ரூ.41,239 கோடியும், ரூ.840 கோடி பொருட்கள் இறக்குமதி வசூல் உள்பட செஸ் வரியாக ரூ.11,779 கோடியும் வசூலிக்கப்பட்டுள்ளது.
0 Comments