19-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்று வந்தது. கடைசி நாளான ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 2வது 88.17 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப்பதக்கதை கைப்பற்றினார்.
உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சிறப்பு மிக்க சாதனையை படைத்துள்ளார் தடகள வீரர் நீரஜ் சோப்ரா.
இதனைத்தொடர்நது மகளிருக்கான 3000 மீட்டர் மகளிர் ஸ்டீப்பிள் சேஸ் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. அவர் பந்தய தூரத்தை 9.15 நிமிடம் 31 நொடிகளில் கடந்து 11வது இடம் பிடித்தார்.
அவர் 11வது இடம் பிடித்தாலும் இது புதிய தேசிய சாதனை மட்டுமின்றி அடுத்த ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக் தொடருக்கு தகுதி பெற தேவையான 9.23 நிமிடத்திற்குள் பந்தய தூரத்தை கடந்துள்ளார். ஆடவர் 4*400 தொடர் ஓட்டத்தில் இந்தியா 5ம் இடம் பிடித்தது.
0 Comments