கர்நாடகாவில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 வழங்கும் திட்டத்தை தொடங்கினார் ராகுல் காந்தி / Rahul Gandhi launched a scheme to provide Rs 2,000 per month to female heads of households in Karnataka
கர்நாடக தேர்தலின்போது, குடும்ப தலைவிகளுக்கு மாதம்ரூ.2,000, பட்டதாரிகளுக்கு ரூ.3,000, டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ.1,500, மாதம் 10 கிலோ இலவசஅரிசி, அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் இலவசம், பேருந்தில் மகளிருக்கு இலவசப் பயணம் ஆகிய 5 வாக்குறுதிகளை காங்கிரஸ் அளித்தது.
இதன்படி, பட்டதாரிகளுக்கு ரூ.3,000, டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ.1,500, மாதம் 10 கிலோ இலவச அரிசி, அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம், பேருந்தில் மகளிருக்கு இலவச பயணம் ஆகிய திட்டங்கள் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து 100 நாள் ஆனதைக் குறிக்கும் வகையில் மைசூரு நகரில் நேற்று விழா நடைபெற்றது.
இதில் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது மல்லிகார்ஜுன கார்கே குடும்ப தலைவிகளுக்கு ரூ.2,000 வழங்கி, குடும்ப லட்சுமி திட்டத்தை தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து பெண்களுக்கு ராகுல் காந்தி, சித்தராமையா, டி.கே.சிவகுமார் ஆகியோரும் ரூ.2,000 வழங்கினர்.
0 Comments