உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகள் (டபிள்யூயுஜி) சீனாவின் செங்டு நகரில் நடைபெற்று வந்தன. இந்நிலையில் நேற்று போட்டியின் நிறைவு நாள் விழா நடைபெற்றது.
இந்தப் போட்டியில் பங்கேற்ற இந்தியா மொத்தம் 26 பதக்கங்களைக் கைப்பற்றி பதக்கப் பட்டியலில் 7-வது இடத்தைப் பிடித்தது. இதில் 11 தங்கம், 5 வெள்ளி, 10 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும். இதற்கு முன்னர் இந்தியா அதிகபட்சமாக 21 பதக்கங்களே வென்றிருந்தது.
போட்டியை நடத்திய சீனா 178 பதக்கங்களை (103 தங்கம், 40 வெள்ளி, 35 வெண்கலம்), வென்று முதலிடத்தைப் பிடித்தது. ஜப்பான் 21 தங்கம், 29 வெள்ளி, 43 வெண்கலப் பதக்கங்களுடன் 2-வது இடத்தையும், கொரியா 17 தங்கம், 18 வெள்ளி, 23 வெண்கலப் பதக்கங்களுடன் 3-வது இடத்தையும் பிடித்தது.
0 Comments