ஒவ்வொரு மாதமும் சிறந்த சர்வதேச வீரர்களை தேர்வு செய்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கவுரவித்து வருகிறது. அந்தந்த மாதங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய 3 வீரர்கள், அந்த மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கு பரிந்துரைக்கப்படுவார்கள்.
கடந்த மாதம் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் கிரிக்கெட் தொடர் பரபரப்பாக நடைபெற்றது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணியின் ஜேக் க்ராவ்லே மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டனர். இதேபோன்று உலகக்கோப்பை தகுதிச் சுற்றில் நெதர்லாந்து அணி கவனம் பெற்றது. இந்த அணியின் பாஸ் டீ லீடும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் ஜூலை மாதத்திற்கான சிறந்த வீரராக கிறிஸ் வோக்ஸை தேர்வு செய்து ஐசிசி அறிவிப்பு வெளியிட்டது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடியது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்றன. 4 ஆவது போட்டி டிராவில் முடிந்தது.
இதன் மூலம் ஆஷஸ் தொடர் 2-2 என்ற கணக்கில் டிரா ஆனது. இதில் தொடர் நாயகனாக இங்கிலாந்து அணியின் கிறிஸ் வோக்ஸ் அறிவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments