Recent Post

6/recent/ticker-posts

ராணுவ சேவைகளுக்கு இடையிலான அமைப்பு (கட்டளை, கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கம்) மசோதா - 2023 மக்களவையில் நிறைவேறியது / The Inter-Services Organization (Command, Control and Discipline) Bill - 2023 was passed in the Lok Sabha

  • ராணுவ சேவைகளுக்கு இடையிலான அமைப்பு (கட்டளை, கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கம்) மசோதா - 2023 மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. 
  • இந்த மசோதா, ராணுவ சேவைகளுக்கு இடையிலான அமைப்புகள் அல்லது அதனுடன் இணைக்கப்பட்ட அமைப்புகள், அவற்றில் பணியாற்றும் ஊழியர்கள் தொடர்பாக, தலைமைத் தளபதி மற்றும் தலைமை கமாண்டர், கமாண்டிங் அதிகாரி ஆகியோருக்கு, அனைத்து ஒழுங்கு மற்றும் நிர்வாக அதிகாரங்களை வழங்க வகைசெய்கிறது.
  • தற்போது, ராணுவவீரர்கள் தங்களுக்கென்று குறிப்பிட்ட சேவை சட்டங்களாக இருக்கும் ராணுவச் சட்டம் 1950, கடற்படைச் சட்டம் 1957, விமானப்படைச் சட்டம் 1950 ஆகியவற்றில் உள்ள விதிகளின்படி நிர்வகிக்கப்படுகிறார்கள். 
  • தவறான நடத்தை அல்லது ஒழுக்கமின்மை வழக்குகளை விரைவாக தீர்ப்பது மற்றும் பல நடவடிக்கைகளைத் தவிர்ப்பதன் மூலம் பொதுமக்களின் பணம் மற்றும் நேரத்தை மிச்சப்படுத்துவது போன்ற உறுதியான நன்மைகளை இந்த மசோதா உருவாக்கும்.
  • இந்த மசோதா முப்படைகளுக்கும் இடையே அதிக ஒருங்கிணைப்புக்கு வழிவகுக்கும்; வரும் காலங்களில் கூட்டான கட்டமைப்புகளை உருவாக்குவதற்கும், ராணுவத்தினரின் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கும் வலுவான அடித்தளத்தை அமைக்கும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel