Recent Post

6/recent/ticker-posts

நான் முதல்வன் மதிப்பீட்டுத் தேர்வு 2023 நுழைவுச் சீட்டு வெளியீடு / NAAN MUDHALVAN EXAM 2023 HALL TICKET RELEASED

நான் முதல்வன் மதிப்பீட்டுத் தேர்வு 2023 நுழைவுச் சீட்டு வெளியீடு / NAAN MUDHALVAN EXAM 2023 HALL TICKET RELEASED

நான் முதல்வன் மதிப்பீட்டுத் தேர்வு 2023 நுழைவுச் சீட்டு வெளியீடு / NAAN MUDHALVAN EXAM 2023 HALL TICKET RELEASED: தமிழக இளைஞர்கள் மத்திய அரசு வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளை எளிதாக அணுகும் வண்ணம் பல பயிற்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுப் பிரிவானது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் கடந்த மார்ச் மாதம் 7ம் தேதி துவங்கி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், 2023 - 24க்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் உரையில், 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசுக் குடிமைப் பணித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் ஆயிரம் மாணவர்கள், மதிப்பீட்டுத் தேர்வு மூலம் தேர்வு செய்து, முதல்நிலைத் தேர்வுக்குத் தயாராவதற்கு ஒவ்வொரு மாணவருக்கும் மாதம் 7,500 ரூபாய், பத்து மாதங்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த ஊக்கத்தொகைக்கான ஆயிரம் மாணவப் பயனாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக இம்மாதம் 2ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டு கடந்த17ம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. 

அதன் தொடர்ச்சியாக, 'நான் முதல்வன்' மற்றும் அகில இந்திய குடிமைப் பணிகள் பயிற்சி மையங்களுக்கான மதிப்பீட்டுத் தேர்வு வரும் 10.09.2023 அன்று நடைபெற உள்ள நிலையில், இந்தத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு இன்று (30.08.2023) வெளியிடப்பட்டுள்ளது.

'நான் முதல்வன்' ஊக்கத்தொகைக்கான மதிப்பீட்டுத் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்கள் https://www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளும்படி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், 'நான் முதல்வன்' போட்டித் தேர்வு பிரிவு தெரிவித்து இருக்கிறது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel