இந்திய தேர்தல் ஆணையத்தின் 2023 ஆம் ஆண்டின் தேசிய அடையாளமாக சச்சின் டெண்டுல்கர் அறிவிக்கப்பட்டுள்ளார் / Sachin Tendulkar has been announced as the National Icon of the year 2023 by the Election Commission of India
தேர்தல் செயல்பாட்டில் பங்கேற்பதற்காக வாக்காளர்களை ஊக்குவிப்பதற்காக பல்வேறு துறைகளைச் சேர்ந்த புகழ்பெற்றவர்களை தேசிய அடையாளமாக தேர்தல் ஆணையம் நியமித்து வருகிறது.
கடந்த ஆண்டு நடிகர் பங்கஜ் திரிபாதியை தேசிய அடையாளமாக ஆணையம் அங்கீகரித்திருந்தது. முன்னதாக, 2019 லோக்சபா தேர்தலின் போது, எம்.எஸ்.டோனி, அமீர் கான் மற்றும் மேரி கோம் போன்றவர்கள் தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளங்களாக இருந்தனர்.
அந்த வகையில் இந்த ஆண்டு இந்திய தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளமாக சச்சின் டெண்டுல்கர் அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (புதன்கிழமை) அன்று டெண்டுல்கருக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் இடையே கையெழுத்தாகிறது. மூன்று வருட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, டெண்டுல்கர் வாக்காளர் விழிப்புணர்வை பரப்புவார் என்று கூறப்படுகிறது.
0 Comments