தமிழக அரசு சார்பில் இரண்டு நாட்கள் நடைபெறும் 'ஸ்டார்ட்-அப் திருவிழா' கோவை கொடிசியா தொழில் மற்றும் வர்த்தகக் கண்காட்சி வளாகத்தில் தொடங்கியது.
விழாவில், `ஸ்டார்ட்-அப் தமிழ்நாடு' தகவல் சேவை மையத்தை அமைச்சர் டிஆர்பி.ராஜா தொடங்கிவைத்தார். மேலும், தமிழ்நாடு புத்தொழில் ஆதார நிதித் திட்டம் மூலம் 20 பயனாளிகளுக்கு ஒப்புதல் ஆணைகளை வழங்கினார்.
அதேபோல, பெண்களுக்கான சிறப்புத் தொழில் விரிவாக்கப் பயிற்சி மற்றும் கல்வி நிறுவனங்களில் தொழில்முனைவோர் குழுக்களை தொடங்கிவைத்தார்.
விழாவையொட்டி அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்துவைத்தார்.
0 Comments