ஜெர்மனியின் பெர்லின் நகரில் உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான காம்பவுண்ட் தனிநபர் பிரிவில் 17 வயதான இந்திய வீராங்கனை அதிதி சுவாமி இறுதிப் போட்டியில் மெக்சிகோவின் ஆண்ட்ரியா பெசெராவை எதிர்த்து விளையாடினார்.
இதில் அதிதி சுவாமி 149-147 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றார்.
அதிதி சுவாமி கடந்த ஜூலை மாதம் அயர்லாந்தில் நடைபெற்ற ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றிருந்தார். தற்போது சீனியர் பிரிவில் அவர், உலக சாம்பியன்ஷிப்பில் வாகை சூடி உள்ளார். இதன் மூலம் உலக சாம்பியன்ஷிப்பில் தனிநபர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையும், உலக அளவில் இளம் வீராங்கனை என்ற சாதனையையும் படைத்துள்ளார் அதிதி சுவாமி.
உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் தொடர் - இந்திய அணிக்கு தங்கம்
உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் தொடர் ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நடைபெற்று வருகிறது. இதில் விளையாடிய இந்திய அணியில் இடம்பிடித்த ஜோதி சுரேகா, அதீதி ஸ்வாமி, பர்னீத் கெளர் ஆகியோர், மெக்சிகோவின் டாஃப்னே குயின்டெரோ, அனா சோபியா ஹெர்னாண்டஸ் ஜியோன் மற்றும் ஆண்ட்ரியா பெசெரா ஆகியோர் இறுதிப்போட்டியில் வீழ்த்தினர்.
235-229 என்ற புள்ளி கணக்கில் இந்திய வெற்றி பெற்ற நிலையில், முதல் முறையாக உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றுள்ளது.
0 Comments