மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா தலைமையில், மேற்கு மண்டல கவுன்சிலின், 26வது கூட்டம், குஜராத் மாநிலம், காந்திநகரில் நடந்தது.
இந்த சந்தர்ப்பத்தில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் செயலகத்தின் https://iscs-eresource.gov.in மின்-வள வலை தளத்தை திரு. அமித் ஷா தொடங்கி வைத்தார். இந்த இணையதளம் மண்டல கவுன்சில்களின் செயல்பாட்டிற்கு உதவும்.
இந்தக் கூட்டத்தில் குஜராத், மகாராஷ்டிரா, கோவா மாநில முதலமைச்சர்கள் மற்றும் தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி மற்றும் டாமன் & டையூவின் நிர்வாகிகள், மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சர் மற்றும் மேற்கு மண்டலத்தில் உள்ள மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள், மத்திய உள்துறை செயலாளர், மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் செயலகத்தின் செயலாளர் மற்றும் மாநிலங்கள் மற்றும் மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளைச் சேர்ந்த பிற மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
குஜராத்தின் காந்திநகரில் நடைபெற்ற 26வது மேற்கு மண்டல கவுன்சில் கூட்டத்தில் மொத்தம் 17 பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன, அவற்றில் 09 பிரச்சினைகள் தீர்க்கப்பட்டன.
மீதமுள்ள பிரச்சினைகள் தேசிய நலன் சார்ந்த பிரச்சினைகள் உட்பட ஆழமான விவாதத்திற்குப் பிறகு கண்காணிக்கப்பட்டன. உறுப்பு மாநிலங்கள் குறிப்பாக மற்றும் ஒட்டுமொத்த நாடு சம்பந்தப்பட்ட சில முக்கிய பிரச்சினைகள், நிலம் தொடர்பான பிரச்சினைகள், நீர் விநியோகம் தொடர்பான பிரச்சினைகள், ஏலம் விடப்பட்ட சுரங்கங்களை இயக்குதல், பொது சேவை மையத்தில் பண வைப்பு வசதி, வங்கிக் கிளைகள் / அஞ்சல் வங்கி வசதிகள் மூலம் கிராமங்களை உள்ளடக்குதல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் / கற்பழிப்பு வழக்குகளை விரைவாக விசாரித்தல், பாலியல் பலாத்கார மற்றும் போக்ஸோ சட்ட வழக்குகளை விரைந்து முடிக்க விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் (எஃப்.டி.எஸ்.சி) திட்டத்தை செயல்படுத்துதல், கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு பிராட்பேண்ட் இணைப்பை வழங்க மாநிலங்கள் பாரத் நெட் உள்கட்டமைப்பைப் பயன்படுத்துதல், 5 ஜி சேவையை எளிதாக்க மாநிலங்கள் தொலைத்தொடர்பு ஆர்.ஓ.டபிள்யூ விதிகளைப் பின்பற்றுதல், மோட்டார் வாகனங்கள் (வாகன ஸ்கிராப்பிங் வசதி திருத்தத்தின் பதிவு மற்றும் செயல்பாடுகள்) விதிகளை அமல்படுத்துதல், 2022, தொடக்க வேளாண்மைக் கடன் சங்கங்களை (பிஏசிஎஸ்) வலுப்படுத்துதல் ஆகிய பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன.
ENGLISH
The 26th meeting of the Western Zone Council was held in Gandhinagar, Gujarat under the chairmanship of Union Home Minister and Cooperatives Minister Amit Shah. On this occasion, Shri. Inaugurated by Amit Shah. This website will help in the functioning of Zonal Councils.
The meeting was attended by Chief Ministers of Gujarat, Maharashtra, Goa and Executives of Dadra and Nagar Haveli and Daman & Diu, Deputy Chief Minister of Maharashtra and Chief Secretaries of States in Western Zone, Union Home Secretary, Secretary of the Inter-State Council Secretariat and other senior officials from State and Union Ministries and Departments. Officials attended.
A total of 17 issues were discussed in the 26th Western Zone Council meeting held at Gandhinagar, Gujarat, out of which 09 issues were resolved.
Remaining issues were monitored after in-depth discussion, including issues of national interest. Some of the major issues involving Member States in particular and the country as a whole are land related issues, water supply related issues, operation of auctioned mines, facility of cash deposit in public service center, coverage of villages through bank branches/postal banking facilities, sexual crimes/rape against women and children. Implementation of Fast Track Special Courts (FDSC) scheme for speedy trial of cases, implementation of Fast Track Special Courts (FDSC) scheme to speed up disposal of rape and POCSO cases, States deploying Bharat Net infrastructure to provide broadband connectivity to homes in villages, States Telecom ROW to facilitate 5G service Issues such as adherence to rules, implementation of Motor Vehicles (Registration and Operations of Vehicle Scrapping Facility Amendment) Rules, 2022, strengthening of Primary Agricultural Credit Societies (PACS) were discussed.
0 Comments