ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி - ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு / 28% GST on online games - Union Minister Nirmala Sitharaman announced
டெல்லியில் 51வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் தொடங்கியது. காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில அரசுகளின் சார்பில் நிதி அமைச்சகத்தின் முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28 சதவீத சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.
இறுதியில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி அமல்படுத்த முடிவு எடுக்கப்பட்டது. வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வரும் என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
இதற்காக ஒன்றிய மற்றும் மாநில சட்டங்களில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்ட பிறகு, புதிய வரி விதிப்பு அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும். இந்த வரி விதிப்பு நடைமுறைக்கு வந்த 6 மாதங்களுக்குப் பிறகு மறுஆய்வு செய்யப்படும்.
0 Comments