விக்ரம் லேண்டரில் பொருத்தப்பட்ட கருவி ChaSTE நிலவின் மேற்பரப்பில் வெப்பநிலையை அளவிட்டு முதல் தகவலை பதிவு செய்துள்ளது.
ChaSTE கருவியின் மூலம் நிலவின் தென் துருவப்பகுதியில் உள்ள மணல் பரப்பின் வெப்பநிலை கண்டறியப்பட்டுள்ளது. நிலவின் தென் துருவத்தில் சுமார் 10 சென்டிமீட்டர் வரை அளவிடுவதற்கான தன்மையை இந்த கருவி கொண்டுள்ளதாகவும் மற்றும் இதில் தனிப்பட்ட வெப்பநிலையை கண்டறியும் வகையில் சுமார் 10 சென்சார் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
முதல் நிலை தகவலாக ChaSTE கண்டறிந்த வெப்பநிலை குறித்த தரவுகளை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. அதன்படி, 8 சென்டிமீட்டரில் அளவில் -10 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளதாகவும், 1 சென்டிமீட்டர் அளவில் 50 டிகிரி வரை வெப்பம் பதிவாகியுள்ளதாகவும் இஸ்ரோ தரவுகளை வெளியிட்டுள்ளது.
நிலவின் தென் துருவப்பகுதியின் வெப்பநிலை குறித்த முதல் தரவு இது என்றும் மேலும் விரிவான ஆய்வை மேற்கொண்டுள்ளதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
ChaSTE கருவியை விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் Space Physics Laboratory குழு, Physical Research laboratory-வுடன் இணைந்து உருவாக்கியதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
0 Comments