டிஎன்பிஎஸ்சி சார்பில் துணை கலெக்டர் 18 இடம், துணை காவல் கண்காணிப்பாளர் 26, 13 கூட்டுறவு சங்க துணை பதிவாளர்கள், 25 வணிகவரி உதவி ஆணையர், 7 ஊரக மேம்பாடு உதவி இயக்குனர், 3 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் உள்பட 95 பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலை தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 19ம் தேதி நடந்தது.
1 லட்சத்து 90 ஆயிரம் பேர் எழுதிய தேர்வில் வெறும் 2 ஆயிரத்து 162 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதில் பங்கேற்ற 2,113 பேருக்கான மெயின் தேர்வு சென்ைனயில் 22 பள்ளிகளில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களில் கடந்த வியாழக்கிழமை முதல் தாள் தேர்வு (கட்டாய தமிழ் மொழி தகுதி தேர்வு) நடந்தது.
வெள்ளிக்கிழமை 2ம் தாள் தேர்வும், சனிக்கிழமை 3ம் தாள் தேர்வும், ஞாயிற்றுக்கிழமை 4ம் தாள் தேர்வும் நடந்தது. தேர்வு நடந்த மையங்களில் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளும் திடீர் ஆய்வு பணியிலும் ஈடுபட்டனர். 4 நாட்கள் நடைபெற்ற தேர்வும் எளிதாக இருந்ததாக தேர்வு எழுதியவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
0 Comments