Recent Post

6/recent/ticker-posts

உலக கோப்பை வில்வித்தை (ஸ்டேஜ்-4) - இந்தியாவுக்கு இரண்டு வெண்கலம் / World Cup Archery (Stage-4) - Two bronze for India

  • பிரான்சில் உலக கோப்பை வில்வித்தை (ஸ்டேஜ்-4) நடக்கிறது. 'ரீகர்வர்' பிரிவில் இந்தியாவின் அடானு தாஸ், திராஜ், பிரபாகர் இடம் பெற்ற ஆண்கள் அணி, அரையிறுதியில் சீன தைபேவிடம் 0-6 என தோற்றது. பின் நடந்த வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் ஸ்பெயினை சந்தித்தது. 
  • இதில் இந்திய ஆண்கள் அணி 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்ற, வெண்கலப் பதக்கம் கைப்பற்றியது.
  • பெண்கள் அபாரம்பெண்கள் 'ரீகர்வ்' பிரிவில் இந்தியாவின் பஜன் கவுர், அன்கிதா கவுர், சிம்ரன்ஜீத் இடம் பெற்ற அணி களமிறங்கியது. அரையிறுதியில் இந்திய பெண்கள் அணி, 4-5 என சீன தைபேவிடம் வீழ்ந்தது.
  • வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியா, மெக்சிகோ மோதின. ஸ்கோர் 4-4 என சமனில் முடிந்தது. பின் நடந்த 'ஷூட் ஆப்' முறையில் அசத்திய இந்திய பெண்கள் 5-4 என வென்று வெண்கலம் வென்றனர்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel