சென்னை அருகே ரூ.4,276 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் - முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் / Rs 4,276 crore seawater desalination plant near Chennai - CM Stalin lays foundation stone
சென்னை அருகே உள்ள பேரூரில் தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய அளவில் ரூ.4,276.44 கோடியில் 400 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் பணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் சார்பில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதியுதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் திட்டத்துக்கு தற்போது அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப் பெரிய நிலையமாக இது அமைய உள்ளது. பணிகள் 2026-ம் ஆண்டுக்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.
0 Comments