வேலைவாய்ப்பு திருவிழா மூலம் நாடு முழுவதும் 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை - பிரதமர் மோடி வழங்கினார் / Prime Minister Modi issued job orders to 51 thousand people across the country through the Employment Festival
நாடு முழுவதும் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புமாறு, உயர் அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு உத்தரவிட்டார்.
இதன்படி, ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் பேருக்கு மத்திய அரசு வேலை வழங்க வகை செய்யும் வேலை வாய்ப்பு திருவிழாவை (ரோஜ்கார் மேளா) பிரதமர் மோடி கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கி வைத்தார்.
இதன்படி மாதந்தோறும் ஆயிரக்கணக்கானோருக்கு அவர் பணி நியமன ஆணைகளை காணொலி மூலம் வழங்கி வருகிறார்.
இதன் தொடர்ச்சியாக, மத்திய அரசு, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் சார்பில் 45 நகரங்களில் வேலை வாய்ப்பு திருவிழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், மத்திய உள் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய ஆயுதப்படைப் பிரிவு (சிஎபிஎப்) பணிக்கு தேர்வான 51 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பிரதமர் மோடி காணொலி மூலம் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இவர்கள் சிஆர்பிஎப், பிஎஸ்எப், சஷாஸ்திர சீமா பால் (எஸ்எஸ்பி), அசாம் ரைபிள்ஸ், சிஐஎஸ்எப், ஐடிபிபி, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் டெல்லி போலீஸ் உள்ளிட்டவற்றில் காவலர் (ஜெனரல் டூட்டி), உதவி ஆய்வாளர் உட்பட பல்வேறு பதவிகளில் பணியில் சேர உள்ளனர்.
0 Comments