நிலவின் தென் துருவத்தில் ஆக்சிஜன் உள்ளிட்ட 7 வகையான தனிமங்கள் இருப்பதை சந்திரயான் - 3 விண்கலம் கண்டுபிடிப்பு / Chandrayaan-3 spacecraft discovered the presence of 7 types of elements including oxygen at the South Pole of the Moon
நிலவின் தென் துருவத்தில் ஆய்வு மேற்கொண்டு வரும் ரோவரில் உள்ள Laser-Induced Breakdown Spectroscope (LIBS) என்ற கருவியி நிலவின் மேற்பரப்பில் சல்பர் இருப்பதை சந்தேகத்திற்கு இடமின்றி உறுதி செய்து உள்ளது.
மேலும் அலுமினியம், கால்சியம், இரும்பு, குரோமியம், டைட்டானியம், மங்கனிசு, சிலிக்கான் மற்றும் ஆக்சிஜன் இருப்பதை ஏற்கெனவே எதிர்பார்த்தபடி உறுதி செய்துள்ளது இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும் ஹைட்ரஜனை தேடும் பணி நடந்து வருவதாக 'எக்ஸ்' சமூகவலைத்தள பக்கத்தில் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
தனிமங்களை கண்டுபிடித்த LIBS- என்ற கருவி பெங்களூருவில் இஸ்ரோவில் உள்ள எலக்ட்ரோ-ஆப்டிக்ஸ் சிஸ்டம்ஸ் (LEOS ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
0 Comments