7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வந்தது.
இந்த தொடரில், தோல்வியையே சந்திக்காத இந்தியா அணியும் மலேசியா அணியும் இறுதி போட்டியில் மோதின. இதில் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் மலேசியா அணியை வீழ்த்தி 4வது முறையாக ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றியது.
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றிய இந்திய ஹாக்கி அணிக்கு வெற்றி கோப்பையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் , மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூர் ஆகியோர் வழங்கினர். உடன் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் இருந்தார்.
4வது முரையாக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு, தமிழக அரசு சார்பில் வீரர்களுக்கு தலா 5 லட்ச ரூபாய் பரிசு தொகையும், பயிற்சியாளர்களுக்கு 2 1/2 லட்ச ரூபாய் பரிசு தொகையும் பரிசாக அறிவிக்கப்பட்டது.
அதே போல ஹாக்கி இந்தியா அமைப்பில் இருந்து வீரர்களுக்கு 3 லட்ச ரூபாய் பரிசு தொகையும், பயிற்சியாளர்களுக்கு 1 1/2 லட்ச ரூபாய் பரிசுத்தொகையும் அறிவிக்கப்பட்டது.
0 Comments