சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் அமைந்துள்ள 119 அடி உயர கொடிக்கம்பத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றி முதல்வர் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
பின்னர் சுதந்திர தின உரையாற்றிய முதல்வர் மு.க ஸ்டாலின் பேசியதாவது., மாநிலங்களுக்கு மாநிலம் உணவு, மொழி, பண்பாட்டில் மாறுபாடு உள்ளது. வேற்றுமைகளை களைந்து ஒற்றுமையுடன் வாழ்வதே நம் பலம். மதங்களின் பெயரால் மக்களிடையே உள்ள பிளவை களைய முயன்றவர் மகாத்மா காந்தி.
நாட்டின் வளர்ச்சி பெண்களிடம் இருந்தே தொடங்குகிறது என்பதை அறிந்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். புதுமைப் பெண், கட்டணமில்லா பேருந்து சேவை என பெண்களுக்கான திட்டங்களை வகுத்துள்ளோம்.
பெண்களுக்கான கட்டணமில்லா பயணத் திட்டம் இனி 'விடியல் பயணத் திட்டம்' என்று அழைக்கப்படும். மாநிலம் முழுவதும் அனைத்து அரசு ஆரம்ப பள்ளிகளிலும் ஆக.25 முதல் காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
0 Comments