Recent Post

6/recent/ticker-posts

ரூ.7,800 கோடியில் ராணுவ தளவாடங்கள் கொள்முதல் - ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் / Rs 7,800 crore purchase of military equipment - Union Defense Ministry approves

 

  • ராணுவ தளவாட கொள்முதல் குழு கூட்டம், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் டெல்லியில் நடந்தது. இதில், ரூ.7,800 கோடி மதிப்பிலான பல்வேறு ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 
  • இதன்படி, விமானப்படையின் செயல்திறனை அதிகரிக்க, எம்ஐ-17 வி5 ஹெலிகாப்டர்களில் எலக்ட்ரானிக் போர்கருவிகளை வாங்கவும், அவற்றை நிறுவவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த போர்க்கருவிகள் பெல் நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட உள்ளது.
  • இதே போல, இலகுரக இயந்திர துப்பாக்கி, கடற்படையின் எம்எச்-60ஆர் ஹெலிகாப்டருக்கான ஆயுதங்கள், ஆளில்லா கண்காணிப்பு, வெடிமருந்துகள், எரிபொருள் வழங்குதல் மற்றும் போர்க்களத்தில் காயமடைந்தவர்களை மீட்பதற்கு உதவும் தானியங்கி கவச வாகனங்கள் ஆகியவற்றை வாங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 
  • புராஜெக்ட் சக்தி திட்டத்தின் கீழ் ராணுவத்திற்கு மடிக்கணினிகள் மற்றும் டேப்லெட்டுகளை வாங்குவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்முதல்கள் அனைத்தும் உள்நாட்டு நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே பெறப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel