Recent Post

6/recent/ticker-posts

பிறப்பு, இறப்பு பதிவு மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம் / Birth and Death Registration Bill passed in Lok Sabha

  • பிறப்பு மற்றும் இறப்பு பதிவு திருத்த மசோதாவை, மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், லோக்சபாவில் தாக்கல் செய்தார். பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டம் இயற்றப்பட்டதில் இருந்து, கடந்த 54 ஆண்டுகளாக ஒருமுறை கூட திருத்தப்படவில்லை.
  • சமூகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் மாறி வரும் தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு ஏற்ப, பொதுமக்களுக்கு இந்த திருத்தங்கள் தேவைப்படுகின்றன. இதற்காக, பொதுமக்கள் மற்றும் மாநில அரசுகளுடன் ஆலோசித்து திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. 
  • இந்த மசோதாவின்படி, பள்ளி, கல்லுாரிகளில் சேருவது, ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட் வாங்குவது, அரசு வேலைகளில் சேருவது போன்றவற்றுக்கு பிறந்த ஊர் மற்றும் தேதிக்கான ஒரே ஆவணமாக, பிறப்பு சான்றிதழை பயன்படுத்த முடியும்.
  • இந்த திருத்தத்தின் படி, மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு துறைகள், இந்த பிறப்பு, இறப்பு தரவுகளை, சேவை திட்டங்களுக்கு பயன்படுத்த முடியும். 
  • மக்கள் தொகை பதிவு, வாக்காளர் பட்டியல், ஆதார் எண், ரேஷன் அட்டை உள்ளிட்டவற்றுக்கு அரசு பயன்படுத்த முடியும். மேலும், தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள், ஆதரவற்ற குழந்தைகள், காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்ட குழந்தைகளின் பிறப்பு ஆவணங்களை பதிவு செய்யும் நடைமுறையை இந்த மசோதா எளிதாக்குகிறது.
  • மேலும், அனைத்து மருத்துவமனைகளும் இறப்பு குறித்த சான்றிதழை பதிவாளரிடம் வழங்குவதை இந்த சட்ட திருத்தம் கட்டாயமாக்குகிறது. இந்த மசோதா லோக்சபாவில் நிறைவேறியது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel