விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் இரண்டாம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. இங்கு 15 அடி ஆழத்தில் 15 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. தற்போது 15வது குழியில் அகழாய்வு நடந்து வருகிறது.
இதுவரை நடந்த அகழாய்வில் தங்க அணிகலன்கள், பகடைக்காய், தோசைக் கல், சுடுமண் பொம்மை, புகை பிடிப்பான் கருவி, காதணி உள்ளிட்ட 3,150க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், 15வது குழியில் நடந்த அகழாய்வில் சுடுமண்ணாலான வடிதட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
0 Comments