Recent Post

6/recent/ticker-posts

நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த 'வீர்'களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் “என் மண் என் தேசம்” இயக்கம் / "En Man En Desam" movement to pay tribute to the 'heroes' who sacrificed their lives for the country

  • பிரதமர் திரு நரேந்திர மோடி அண்மையில் தனது மன் கி பாத் எனப்படும் மனதின் குரல் வானொலி உரையின்போது 'மேரி மாத்தி மேரா தேஷ்' எனப்படும் என் மண் என் தேசம் இயக்கத்தை அறிவித்தார். 
  • இந்த இயக்கம் நாட்டுக்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த துணிச்சலான சுதந்திர போராட்ட வீரர்களை கௌரவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 
  • இதில் நாடு முழுவதும் பல்வேறு செயல்பாடுகள் நடைபெறும். நாட்டுக்காகத் தியாகம் செய்தவர்களை நினைவுகூரும் வகையில் நினைவு பலகைகள் கிராம பஞ்சாயத்துகளில் நிறுவப்படும்.
  • தகவல் ஒலிபரப்புத் துறையின் செயலாளர் திரு அபூர்வா சந்திரா செய்தியாளர் சந்திப்பில் இந்த தகவலைத் தெரிவித்தார். கலாச்சாரத்துறை செயலாளர் திரு கோவிந்த் மோகன் மற்றும் இளைஞர் நலத்துறை செயலாளர் திருமதி மீட்டா ராஜீவ்லோச்சன் ஆகியோரும் இந்த செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றனர். பிரசார் பாரதியின் தலைமைச் செயல் அதிகாரி திரு கௌரவ் திவிவேதியும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
  • என் மண் என் தேசம் இயக்கம் ஆகஸ்ட் 9 ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 15ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளுடன் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் நிறைவு விழா 30 ஆகஸ்ட் 2023 அன்று புதுதில்லியில் உள்ள கர்தவ்யா பாதையில் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெற உள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel