கிரீஸில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட பிரதமா் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதான 'தி கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ஆா்டா் ஆஃப் ஹானா்' விருது வழங்கப்பட்டது.
கிரீஸ் அதிபா் மாளிகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமா் மோடிக்கு அந்த விருது வழங்கப்பட்டது. அந்த விருதை வழங்கியதற்காக அந்நாட்டு அதிபா் கேத்தரினாவுக்கு இந்திய மக்கள் சாா்பாக நன்றி தெரிவித்துக் கொள்வதாகப் பிரதமா் மோடி கூறினாா்.
இந்தியாவின் மதிப்பை சா்வதேச அளவில் உயா்த்துவதற்கும், நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் அயராது உழைத்து வருவதற்காக இந்த விருது பிரதமா் மோடிக்கு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எகிப்து, அமெரிக்கா, பஹ்ரைன், ரஷியா, ஐக்கிய அரபு அமீரகம், பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளின் உயரிய விருதுகளையும் பிரதமா் மோடி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments