சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக 'முதல்வரின் பசுமை புத்தாய்வு திட்டம்' தொடக்கம் / Inauguration of 'Chief Minister's Green Innovation Project' for environmental protection
சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற துறை சார்பில், காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதற்கும், மாவட்டங்களின் பசுமைக் கனவுகளை நிறைவேற்ற உதவும் வகையிலும் 'முதல்வரின் பசுமை புத்தாய்வுத் திட்டம்' சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கிவைத்தார்.
இந்த திட்டம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறையின் கீழ் செயல்படும். அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆற்றல் கல்விகளுக்கான நிறுவனம், திட்டத்தின் அறிவுசார் பங்குதாரராக செயல்படும்.
திட்டத் தலைவர், 40 பசுமைஆர்வலர்கள், 4 ஆராய்ச்சி இணையாளர்கள் ஆகியோர் தகுதியின் அடிப்படையில் இந்த திட்டத்துக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
0 Comments