சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் ஒத்துழைப்பை அதிகரிக்க இந்தியாவும் நியூசிலாந்தும் புரிந்துணர்வு ஒப்பந்தம் / India and New Zealand sign MoU to enhance cooperation in civil aviation sector
சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் ஒத்துழைப்பை அதிகரிக்க இந்தியா- நியூசிலாந்து அரசுகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இது புதிய வழித்தடங்களின் திட்டமிடல், குறியீடு பகிர்வு சேவைகள், போக்குவரத்து உரிமைகள் மற்றும் திறன் உரிமை ஆகியவற்றை உள்ளடக்கும்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய எம்.சிந்தியா மற்றும் நியூசிலாந்து வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி வளர்ச்சித் துறை, வேளாண்துறை, உயிரிப்பாதுகாப்பு, நிலத் தகவல், ஊரக சமுதாயத்தினர் நலத் துறை அமைச்சர் திரு டேமியன் ஓ' கானர், ஆகியோர் முன்னிலையில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் செயலாளர் திரு ராஜீவ் பன்சால் மற்றும் நியூசிலாந்து தூதர் திரு டேவிட் பைன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
மே 1, 2016 அன்று ஆக்லாந்தில் நியூசிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையே விமான சேவைகள் ஒப்பந்தம் கையெழுத்தானது. இரு நாடுகளுக்கும் இடையிலான விமான சேவை தொடர்பான தற்போதைய ஏற்பாடுகள் குறித்து நியூசிலாந்து அரசும், இந்திய அரசும் மறுஆய்வு செய்துள்ளன.
கையெழுத்தான இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையிலான சிவில் விமானப் போக்குவரத்தில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, நியூசிலாந்து விமான நிறுவனம் இந்தியாவில் புதுதில்லி, மும்பை, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா ஆகிய ஆறு இடங்களுக்கும் எத்தனை சேவைகளையும் இயக்கலாம்.
ஆக்லாந்து, வெலிங்டன், கிறைஸ்ட்சர்ச் மற்றும் நியூசிலாந்தில் உள்ள மேலும் மூன்று இடங்களுக்கு இந்தியக் குடியரசின் எந்த வகையான விமானங்களையும் இந்திய விமான நிறுவனங்கள் இயக்கலாம்.
ENGLISH
The India-New Zealand governments have signed a Memorandum of Understanding to enhance cooperation in the field of civil aviation. This will include the planning of new routes, code sharing services, traffic rights and capacity ownership.
The MoU was signed in the presence of Indian Civil Aviation Minister Mr. Jyotiraditya M. Scindia and New Zealand's Minister of Trade and Export Development, Agriculture, Biosecurity, Land Information and Rural Community Welfare Mr. Damian O'Connor and Secretary of the Ministry of Civil Aviation Mr. Rajiv Bansal. and New Zealand Ambassador Mr. David Pine signed.
An Air Services Agreement between New Zealand and India was signed in Auckland on 1 May 2016. The Government of New Zealand and the Government of India have reviewed the current arrangements regarding air services between the two countries.
The signed MoU is expected to further strengthen bilateral relations in civil aviation between the two countries.
According to this MoU, the New Zealand airline can operate any number of services to six destinations in India: New Delhi, Mumbai, Bengaluru, Chennai, Hyderabad and Kolkata.
Indian airlines can operate any type of flight from the Republic of India to Auckland, Wellington, Christchurch and three more destinations in New Zealand.
0 Comments