தமிழக சட்டசபையில், இந்தாண்டு ஏப்., 21ல், 'தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சிறப்பு திட்டங்கள் சட்டம் - 2023' நிறைவேற்றப்பட்டது.
நீர் நிலைகள், ஆறுகள், ஓடைகள் போன்றவை, இயற்கை நிகழ்வுகளால் தன் பரப்பை விரிவாக்கி, போக்கை மாற்றிக் கொண்டால், அவற்றை பாதுகாக்க வேண்டும் தனியாருக்கு சொந்தமான நிலத்தின் வழியாக, தண்ணீர் அதன் போக்கை மாற்றிக் கொண்டால், அந்த நிலத்தை அரசு முடிவின்படி வழங்க வேண்டும்.
இந்த நிலப்பரிமாற்ற முறையை, சட்டப்பூர்வமாக ஒழுங்குபடுத்தவும், நீர் நிலையை பாதுகாக்கவும், இந்த சட்டம் வழிவகை செய்கிறது வணிகம், தொழில் சார்ந்த திட்டத்தை, 247 ஏக்கருக்கு குறையாத நீர்நிலைகள் உள்ள பகுதியில் செயல்படுத்த ஒருவர் விரும்பினால், அந்த திட்டத்திற்கு சிறப்பு அனுமதி கோரி, அரசிடம் விண்ணப்பிக்கலாம்.
அரசு திருப்தி அடைந்தால், எந்த திட்டத்தையும் சிறப்பு திட்டமாக அறிவிக்கலாம். இந்த சட்டத்திற்கு, பல்வேறு விவசாய சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.இந்த சட்ட முன்வடிவுக்கு, கவர்னர் ரவி தற்போது ஒப்புதல் அளித்துள்ளார். தமிழ்நாடு அரசிதழில் சட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
0 Comments