Recent Post

6/recent/ticker-posts

நிலையான வளர்ச்சி இலக்குகளை விரைவுபடுத்துவதற்கான நித்தி ஆயோக் மற்றும் யு.என்.டி.பி புரிந்துணர்வு ஒப்பந்தம் / MOU Between Niti Aayog and UNDP to Accelerate Sustainable Development Goals

TAMIL

  • நிலையான வளர்ச்சி இலக்குகளை நோக்கிய மேம்பாட்டை விரைவுபடுத்துவதற்கான பரஸ்பர உறுதிப்பாட்டை வலியுறுத்தும் வகையில், நித்தி ஆயோக் மற்றும் இந்தியாவில் உள்ள ஐநா வளர்ச்சித் திட்டம் (யு.என்.டி.பி இந்தியா) ஆகியவை தரவு அடிப்படையிலான கண்காணிப்பு, முன்னேறும் மாவட்டங்கள் மற்றும் வட்டங்கள் உள்ளிட்ட பல துறைகளில் ஒத்துழைப்பை முறைப்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
  • நித்தி ஆயோக்கின் தலைமைச் செயல் அதிகாரி திரு பி.வி.ஆர்.சுப்பிரமணியம் முன்னிலையில், நித்தி ஆயோக்கின் நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்த மூத்த ஆலோசகர் டாக்டர் யோகேஷ் சூரி மற்றும் இந்தியாவில் உள்ள ஐநா வளர்ச்சித் திட்டப் பிரதிநிதி திருமதி ஷோகோ நோடா ஆகியோர் கையெழுத்திட்டனர்.
  • இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் 5 ஆண்டுகளுக்கு கையெழுத்தாகியுள்ளது. தேசிய மற்றும் அதற்கு அடுத்த நிலைகளில் நிலையான வளர்ச்சி இலக்குகளை செயல்படுத்துவது மற்றும் கண்காணிப்பை ஒருங்கிணைப்பதற்கான அமைப்பாக நித்தி ஆயோக் உள்ளது. 
  • ஐ.நா அமைப்பில் நிலையான வளர்ச்சி இலக்குகளில் முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதற்கான முயற்சிகளை ஒருங்கிணைப்பதில் ஐநா வளர்ச்சித் திட்டம் முக்கியப் பங்கு வகிக்கிறது.

ENGLISH

  • Underscoring their mutual commitment to accelerate progress towards the Sustainable Development Goals, NITI Aayog and the United Nations Development Program in India (UNDP India) signed an MoU to formalize collaboration in several areas including data-based monitoring, progressive districts and circles.
  • Dr. Yogesh Suri, Senior Adviser on Sustainable Development Goals, Niti Aayog and Ms. Shoko Noda, UN Development Program Representative in India signed the agreement in the presence of Mr. PVR Subramaniam, Chief Executive Officer, Niti Aayog.
  • This MoU has been signed for 5 years. NITI Aayog is the body for coordinating the implementation and monitoring of the Sustainable Development Goals at the national and sub-national levels.
  • The UN Development Program plays an important role in coordinating efforts to accelerate progress on the Sustainable Development Goals within the UN system.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel