நாங்குநேரி சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த, ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு / A one-man panel headed by retired Justice Chanduru to investigate the Nanguneri incident
நாங்குநேரி பெருந்தெருவைச் சேர்ந்த சின்னதுரை என்ற மாணவர், வள்ளியூர் கண்கார்டியா அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். பட்டியலினத்தை சேர்ந்த இவருக்கும், அதே பள்ளியில் படித்த சில மாணவர்களுக்கும் இடையே சாதி ரீதியான மோதல் இருந்து வந்துள்ளது.
கடந்த 9ம் தேதி இரவு வீடு புகுந்து ஒரு கும்பல் சின்னத்துரையையும், தடுக்க வந்த அவரது தங்கையையும் அரிவாளால் தாக்கியது. இது தொடர்பாக, 4 மாணவர்கள் உட்பட 7 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இன உணர்வுகள் காரணமாக உருவாகும் வன்முறைகளைத் தவிர்க்கவும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும், ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்தக் குழு, கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், சமூக சிந்தனையாளர்கள், பத்திரிகைத் துறையினர் என பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கருத்துக்களைப் பெற்று அதனடிப்படையில் அரசுக்கு விரைவில் அறிக்கை சமர்பிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments