பசுமை இயக்கத்தை மேம்படுத்தும் நோக்கில், நகரப் பேருந்து இயக்கங்களை அதிகரிப்பதற்காக பிரதமர் இ-பஸ் சேவைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 169 நகரங்களில் பொது-தனியார் கூட்டு நடவடிக்கை (பிபிபி) மாதிரியில் மொத்தம் 10,000 மின்சார பேருந்துகள் இயக்கப்படும்.
இதற்கிடையில், இந்த திட்டத்தின் 'பசுமை நகர்ப்புற நகர்வு முன்முயற்சி' உள்கட்டமைப்பின் கீழ், மல்டிமாடல் இன்டர்சேஞ்ச் வசதிகள் மற்றும் நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டு (NCMC) அடிப்படையிலான தானியங்கி கட்டண வசூல் அமைப்புகள் 181 நகரங்களில் புதுப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் 3 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட நகரங்களை உள்ளடக்கி இருக்கும். ஒழுங்கமைக்கப்பட்ட பேருந்து சேவை இல்லாத நகரங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இத்திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ.57,613 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.20,000 கோடியை மத்திய அரசு வழங்கும்.
0 Comments