சேலம் ஜவ்வரிசிக்கு புவிசார் குறியீடு / PUVISAR KURIYETU FOR SALEM JAWARISI / GI TAG FOR SALEM JAWARISI: தமிழகத்திலேயே சேலத்தில் தான், மரவள்ளி அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் 32ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது.
ஒரு ஹெக்டேருக்கு 38 டன் மரவள்ளிக்கிழங்கு விளைச்சல் கிடைக்கிறது. இதற்கு அடுத்தபடியாக நாமக்கல், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ஈரோடு, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் மரவள்ளி உற்பத்தியாகிறது. மரவள்ளியில் இருந்து ஜவ்வரிசி, ஸ்டார்ச் மாவு உற்பத்தி செய்யப்படுகிறது.
சேலம் ஜவ்வரிசி தமிழகத்தில் பல பகுதிகளுக்கும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, குஜராத், கொல்கத்தா, மகாராஷ்டிரா, உத்தபிரதேசம், ராஜஸ்தான் உள்பட பல மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
தரமானது என்பதால், வடமாநிலங்களில் சேலம் ஜவ்வரிசிக்கு தனி மவுசு உள்ளது. ஸ்டார்ச் பவுடரில் இருந்து குளுகோஸ், பவுடர், மாத்திரை மற்றும் பல்வேறு விதமான பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.
இத்தனை பெருமைமிக்க சேலம் ஜவ்வரிசிக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என்று 3 ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த கோரிக்கையை பரிசீலித்த ஒன்றிய அரசு, சேலம் ஜவ்வரிசிக்கு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது.
சேலம் சேகோ சர்வ் அலுவலகத்தில் நேற்று நடந்த விழாவில் சேலம் ஜவ்வரிசிக்கு புவிசார் குறியீடு சான்றிதழ் வழங்கப்பட்டது.
ENGLISH
PUVISAR KURIYETU FOR SALEM JAWARISI / GI TAG FOR SALEM JAWARISI: GI TAG FOR SALEM JAWARISI: In Tamil Nadu only in Salem, Maravalli is mostly cultivated. In Salem district, cassava is cultivated in an area of 32 thousand hectares. The yield of cassava is 38 tons per hectare. Next to this, bamboo is produced in districts including Namakkal, Kallakurichi, Villupuram, Erode and Dharmapuri.
Millet and starch flour are produced from Maravalli. Salem Jawarisi is exported to many parts of Tamil Nadu and many states including Kerala, Andhra Pradesh, Karnataka, Gujarat, Kolkata, Maharashtra, Uttar Pradesh and Rajasthan.
Because of its quality, Salem Jawarisi has a separate mouse in the northern states. Glucose, powder, tablet and various other products are manufactured from starch powder. There has been a demand for 3 years to give geocode to the proud Salem Jawavarisi.
Considering this request, the Union Government has given GI Tag to Salem Geovarisi. Geocode certificate was awarded to Salem Jawvarisi at a ceremony held yesterday at the Salem SECO SERV office.
0 Comments